அம்மா கிளினிக் விவகாரம் பயனாளிகள், பணியாளர்கள் விவரம் ெவளியிட தயாரா?..எடப்பாடிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் மெகா தடுப்பூசி முகாம்  மற்றும் காய்ச்சல் மருத்துவ முகாம், டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி ஆகியவை, திருவொற்றியூர் மண்டலம் தாழங்குப்பம் பகுதியில் நேற்று நடந்தது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முகாமை துவக்கி வைத்து, 2வது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அம்மா கிளினிக்கை மூடி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், கடந்த 6 மாதங்களில் கூடுதல் மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், 2 ஆயிரம் அம்மா கிளினிக்குகள் திறக்கப்படும் என கடந்த ஆட்சியில் அறிவித்துவிட்டு அவசர அவசரமாக அம்மா கிளினிக் பலகைகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன.

இதற்காக சுமார் 1900 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டனர். ஆனால் ஒரு செவிலியர் நியமிக்கப்படவில்லை. அம்மா கிளினிக் மூலம் பயன்பெற்றவர்கள் விவரத்தையும், அம்மா கிளினிக்கில் பணியமர்த்தப்பட்டவர்களின் விவரத்தையும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட வேண்டும். தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவர் என்ற அரசாணை வெளியிடப்பட்டது. இதனால் பொது இடங்களுக்கு செல்ல வேண்டுமே என மக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்த இலக்கு: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது  சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்க அலுவலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நடைபெற்ற  சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:

இன்று  நடைபெற்ற 10 வது மெகா சிறப்பு தடுப்பூசி முகாமில் 18,21,005 பேருக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வீடு தேடி தடுப்பூசி திட்டத்தின் கீழ்  40,17,485 பேருக்கு ஒரு வார காலத்திற்குள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  இதுவரை 75.75% பேருக்கு முதல் தவணையும், 39.53%  பேருக்கு 2ம் தவணை தடுப்பூசியும்  செலுத்தப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் 100% முதல் தவணை தடுப்பூசியும், 60%  இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதுவரை நடைபெற்ற அனைத்து சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் மூலமும்  1,94,11,888 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

அம்மா கிளினிக்கை மூடி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், கடந்த 6 மாதங்களில் கூடுதல் மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டுள்ளன

Related Stories: