சங்கராபுரம் பகுதியில் தொடர் மழையால் சேதமடைந்த விவசாய பயிர்களை உதயசூரியன் எம்எல்ஏ ஆய்வு-நிவாரணம் கிடைக்க வழி காண்பதாக உறுதி

சின்னசேலம் : சங்கராபுரம் பகுதியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி, மரவள்ளி பயிர்களின் பாதிப்பை உதயசூரியன் எம்எல்ஏ அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கராபுரம் தாலுகாவில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் பருத்தி, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் விவ

சாயம் செய்திருந்தனர். கடந்த ஆண்டு மழையால் வெங்காய பயிர் அதிகம் பாதிக்கப்பட்டதால் இந்த ஆண்டு குறைந்தளவே வெங்காயத்தை விவசாயம் செய்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக கல்வராயன்மலையடிவாரத்தில் உள்ள க.செல்லம்பட்டு, ச.செல்லம்பட்டு, அரசம்பட்டு, மண்மலை, எடுத்தவாய்நத்தம், கொசப்பாடி உள்ளிட்ட கிராமங்களில் தொடர் மழை பெய்து வருவதால் பருத்தி சுமார் 250 ஏக்கர் அளவு பஞ்சு வராத அளவுக்கு காய் அழுகல் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று மரவள்ளி கிழங்கும் சில காரணங்

களால் தற்போது அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் தொடர் மழை பெய்து வருவதால் சுமார் 250 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கும் தண்ணீர் தேங்கிய நிலையில் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருசில வயல்களில் கிழங்கு அழுகியுள்ளது.

இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொகுதி எம்எல்ஏ உதயசூரியனை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து அவர், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சத்தியராஜ், உதவி அலுவலர்கள் வேலன், செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்று க.செல்லம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பருத்தி, மரவள்ளி வயல்களை ஆய்வு செய்தார். அப்போது பாதிப்பை கண்ட எம்எல்ஏ இந்த பாதிப்பு குறித்து முதல்வர் மற்றும் துறை அமைச்சருடன் கலந்து பேசி நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். அவருடன் சேர்மன் திலகவதி நாகராஜன், நகர செயலாளர் தாகப்பிள்ளை மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories: