போலி சாதிசான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்ததாக போதை பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீது குற்றசாட்டு

மும்பை: போதை பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடே போலி சாதிசான்றிதழ் கொடுத்து அரசு பணியில் சேர்ந்ததாக இரண்டு தலித் அமைப்புகள் புகார் அளித்துள்ளனர். போதை பொருள் வழக்கில் நடிகர் ஷாருகான் மகன் ஆர்யன் கான்-ஐ கைது செய்வதில் சமீர் வான்கடே தீவிரம் காட்டினார்.

அவருக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் சமீபத்தில், பிறப்பால்  முஸ்லிமான சமீர் வான்கடே சாதிசான்றிதழில் மோசடி செய்து ஐ.ஆர்.எஸ். பணியில் சேர்ந்ததாக குற்றம்சாட்டியிருந்தார். தற்போது சுவாபிமானி குடியரசு கட்சி போன்ற மற்றொரு தலித் அமைப்பும் சேர்ந்து சமீர் வான்கடே மீது அதே குற்றசாட்டை முன்வைத்துள்ளனர்.                    

Related Stories: