இந்தியாவில் ஆராய்ச்சி செய்து தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்: அவசரகால பயன்பாட்டிற்கு..!

டெல்லி: இந்தியாவில் ஆராய்ச்சி செய்து தயாரிக்கப்பட்ட  கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இதுவரை எந்தவொரு நாட்டிலும் கொரோனா பாதிப்பு முழுமையாக ஒழிக்கப்படவில்லை. சில நாடுகள் தீவிர கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்துள்ளன.

தற்போதைய சூழலில் தடுப்பூசிகள் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பேராயுதமாக பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து நாடுகளுமே வேக்சின் பணிகளையே முன்னெடுத்து வருகின்றன. அதேபோல பல நாடுகளும் வேக்சின் செலுத்தியவர்களை மட்டும் தங்கள் நாட்டில் அனுமதிக்கின்றன. அதேநேரம் எந்த வேக்சின்களுக்கு ஒப்புதல் என்பது குறித்து ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.

சர்வதேச அளவில் ஆஸ்திரேலியா, ஈரான், மெக்சிகோ என பல்வேறு நாடுகளுக்கும் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ள போதிலும், கோவாக்சின் எடுத்துக் கொண்டவர்களை தங்கள் நாட்டில் அனுமதிப்பது தொடர்பாக பல்வேறு நாடுகளுக்கு இதுவரை முறையாக அறிவிக்கவில்லை.

கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக உலகில் பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளின் பட்டியலை உலக சுகாதார மையம் தொடர்ந்து புதுப்பித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்தியாவில் ஆராய்ச்சி செய்து தயாரிக்கப்பட்ட  கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: