காரைக்காலில் தீபாவளியையொட்டி உணவகம், இனிப்பகங்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

காரைக்கால் : தீபாவளி பண்டிகையை ஒட்டி, காரைக்காலில் உணவகங்கள், இனிப்பகங்கள் மற்றும் பிரியாணி கடைகளில் புதுச்சேரி உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வின்போது உணவு பண்டங்கள் தரமான முறையிலும் சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுகிறதா என சோதனை செய்யப்பட்டது. உணவு தயாரிப்பதற்கு உபயோகப்படும் சமையல் எண்ணெய் இரண்டு முறைக்கு மேல் உபயோகப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டனர். மேலும் இத்தகைய சமையல் எண்ணையை உபயோகப்படுத்துவர் மறுசுழற்சி செய்யப்படுகிறதா என்று தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இனிப்பகங்களில் காலாவதி தேதி குறிப்பிட்டு உள்ளதா என சோதிக்கப்பட்டது. அவ்வாறு காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்தவர்களுக்கு உடனே காலாவதி தேதியை குறிப்பிடும்படி அறிவுறுத்தப்பட்டனர். மேலும் மாவட்ட கலெக்டரின் உத்தரவுக்கு இணங்க, உணவு உரிமமம் இல்லாமல் வியாபாரம் செய்பவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இனிவரும் காலங்களில் உணவு உரிமம் இல்லாமல் யாரேனும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. உணவகங்களை பொருத்தவரை தரக்குறைவான அல்லது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தால் உணவகங்கள் உடனே மூடி சீல் இடப்படும் என புதுச்சேரி உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: