இந்து சமய அறநிலையத்துறை ஆணையரே கோயில் ஊழியரை இடமாற்றம் செய்யலாம்: அரசு உத்தரவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையரே கோயில் ஊழியர்களை இடமாற்றம் செய்யலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் பணியாற்றும் இணை ஆணையர் முதல் உதவி ஆணையர் பணியிட மாற்றத்துக்கு அரசு செயலாளரின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே அரசு செயலாளர் சுற்றுலாத்துறையை கவனிப்பதால் நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்ய முடியாமல் இருந்தது.

இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் இந்து அறநிலையத்துறை சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. மசோதாவுக்குஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் இனி திருக்கோயில் ஊழியர்களை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நிர்வாக நலன் கருதி இடமாற்றம் செய்யலாம் என்று விதிகள் திருத்தம் செய்து அரசு செயலாளர் சந்தர மோகன் அரசாணை வெளியிட்டு உத்தரவிட்டுள்ளார்.அந்த அரசாணையில், ‘இந்து அறநிலையத்துறை சட்டம் 1959 விதி 22 கீழ் கோயில்களில் பணியாற்றும் ஊழியர்களை பணி மாறுதல் செய்ய ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: