பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை பிரதமர் மோடி 7ம் தேதி தொடங்கி வைக்கிறார்

சென்னை, பிப்.28: பூந்தமல்லி – வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவையை வரும் 7ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 2ம் கட்ட திட்டத்தின் முக்கிய பாதையான 4ம் வழித்தடத்தில் பூந்தமல்லி – வடபழனி வரையில் 15.6 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் முடிவடைந்ததுள்ளது. பூந்தமல்லி முதல் வடபழனி வரை அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ வழித்தடம், உயர்மட்ட மேம்பால வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ நிலையங்கள், தண்டவாளங்கள், மின்சார ஓவர்ஹெட் உபகரணங்கள், சிக்னல் மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் ரயில்களின் சோதனை ஓட்டம் மேற்கொண்டுள்ளது. பல கட்டங்களை தொடர்ந்து சோதனை ஓட்டங்களை நடைபெற்றது. மார்ச் 7ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். 7ம் தேதி பூந்தமல்லி முதல் வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டிற்கு அவர் தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: