2 டோஸ் தடுப்பூசி போட்டவர் மகாராஷ்டிரா அமைச்சருக்கு 2வது முறையாக கொரோனா

மும்பை: மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் திலீப் வால்சே பாட்டீல். இவருக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் முதல்முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டது. அதிலிருந்து அவர் குணம் அடைந்த நிலையில், தற்போது அவருக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘எனக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்தது. எனவே, மருத்துவ பரிசோதனை செய்தேன். அதில், கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. டாக்டரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்து வருகிறேன். இப்போது எனது உடல் நலம் சீராக உள்ளது. சமீபத்தில் நான் அமராவதி, நாக்பூர் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டேன்.  அப்போது, என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,’என கூறியுள்ளார். இவர் ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், 2வது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Related Stories:

More
>