ஓபிசி பிரிவினருடன் ஒப்பிடக் கூடாது: திமுக எம்பி வில்சன் பேட்டி

புதுடெல்லி: ஓபிசி இடஒதுக்கீட்டு பிரிவினரை பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினரோடு ஒப்பிட்டு பார்க்கக் கூடாது என திமுக எம்பி வில்சன் தெரிவித்துள்ளார். இது குறித்து டெல்லியில் நேற்று அவர் கூறியதாவது: ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை சந்தித்தேன். அப்போது பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சின்கா கமிட்டியை குறிப்பிட்டு ஒன்றிய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அது கண்டிப்பாக ஏற்புடையது கிடையாது. ஏனெனில், ஓபிசி பிரிவினரை பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினரோடு ஒப்பிட்டு பார்ப்பது சரியானது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More
>