கேரளாவில் 31 வரை கனமழை பெய்யும்

திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் 31ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று (29ம் தேதி) திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடு க்கப்பட்டுள்ளது. நாளை திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா உட்பட 12 மாவட்டங்களுக்கும், 31ம் தேதி திருவனந்தபுரம், கொல்லம் உள்பட 9 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கோட்டயம் அருகே எருமேலி பகுதியில் நேற்று பெய்த கன மழையால் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

Related Stories:

More
>