நண்பனை ஜாமீனில் எடுக்க மூதாட்டியிடம் வழிப்பறி: சிறுவன் கைது

சென்னை: சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலையை சேர்ந்தவர் பார்வதி(65). கடந்த 20ம் தேதி காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டபோது, முகவரி கேட்பது போல் நடித்து பைக்கில் வந்த 2 ஹெல்மெட் கொள்ளையர்கள் 10 சவரன் செயினை பறித்து சென்றனர். புகாரின்படி கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அப்போது பைக் பதிவு எண்களை வைத்து வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது சிறுவன் அருகில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறான். கஞ்சா பிடிப்பதற்காக சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தான். இதற்காக அவனுக்கு கஞ்சா விற்பனை செய்யும் பெண் உட்பட 4 பேர், வழிப்பறியில் ஈடுபடுவது எப்படி என்று கொடூங்கையூரில் உள்ள காலி மைதானத்தில் பயிற்சி அளித்துள்ளனர்.

செயின் பறிப்பு வழக்கில் இவனது நண்பனை கொடுங்கையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவனை ஜாமீனில் எடுக்க ₹1 லட்சத்திற்கு மேல் செலவு ஆகும் என்று சிறையில் உள்ள அவனது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனால் பார்வதியிடம் 10 சவரன் செயினை பறிப்பில் ஈடுபட்டுள்ளான் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

More
>