பாஜ ஆளும் மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் விலை ரூ.120 தாண்டியது: ரூ.110க்கு டீசல் விற்பனை

போபால்: நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஒன்றிய அரசு நிர்ணயித்து வந்தது. அதன் பிறகு, எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள ஒப்புதல் அளித்தது. தற்போது, சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், சட்டீஸ்கர், மகாராஷ்டிராவுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மத்திய பிரதேசத்தின் எல்லைப் பகுதி மாவட்டமான பாலகாட்டில் உள்ள அனுப்பூரில் பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 36 காசுகள் உயர்ந்து ரூ.120.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 37 காசுகள் அதிகரித்து ரூ.109.17 ஆகவும் விற்கப்பட்டது. இது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், `மாவட்ட தலைநகரில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள ஜபல்பூரில் இருந்து அனுப்பூருக்கு பெட்ரோல், டீசல் கொண்டு வரப்படுவதால் போக்குவரத்து செலவையும் சேர்த்து விற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது,’ எனத் தெரிவித்தனர். இதனிடையே, போபாலில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.116.62-க்கும், டீசல் ரூ.106.01-ம் ஆக விற்பனையாகிறது.

Related Stories: