கோவா பாஜ அரசில் எல்லாவற்றிலும் ஊழல்: மேகாலயா ஆளுநர் குற்றச்சாட்டு

பனாஜி: தற்போது மேகாலயா மாநில ஆளுநராக இருக்கும் சத்யபால் மாலிக், இதற்கு முன் கோவா ஆளுநராக இருந்தார். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், `கொரோனா தொற்றின் போது கோவா அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளிலும் ஊழல் மலிந்து இருந்தது. வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தையும்  லஞ்சம் வாங்கி கொணடுதான் செயல்படுத்தப்பட்டது. இந்த ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்ததால் எனது பதவி பறிக்கப்பட்டது,’ என்று கூறினார். ஒரு மாநில ஆளுநர், கோவாவில் உள்ள பாஜ அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

More
>