தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தை சீர்குலைக்க பாஜக முயற்சி!: சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி..!!

தஞ்சை: தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தை சீர்குலைக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார். தஞ்சாவூரில் சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதை ஏற்க முடியாது என்றும் நல்ல நிர்வாகத்திற்கு இடைஞ்சல் தரக்கூடாது என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆட்சியில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்ய புறப்பட்ட போது திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். அரசியல் சாசனத்தின்படி ஆளுநருக்கு உரிய மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வருவதாகவும் அவர் கூறினார். மாணவர்களுக்கு ஊக்க தொகை அளிப்பதற்காக நடத்தப்படும் தகுதி தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுவது ஏற்கத்தகுந்தது அல்ல என்றும் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.

Related Stories: