மதுரையில் ஓபிஎஸ் பேட்டி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயார்

மதுரை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக மதுரையில் ஓபிஎஸ்.  கூறினார். தேனியில் இருந்து, சென்னை செல்வதற்காக நேற்று மதுரை விமானம் நிலையத்திற்கு  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அதிமுக எதிர்நோக்கி தயாராக உள்ளது. எப்போது நடத்தினாலும் சந்திப்போம். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடைபெறும் ரெய்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடைபெற்று கொண்டிருக்கிறது’’ என்றார். அவரை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், எம்எல்ஏ ராஜன்செல்லப்பா உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.

Related Stories:

More
>