ஒரே நாளில் 561 பேர் கொரோனாவால் பலி: கேரளா, அசாம், மேற்குவங்கத்தில் அதிகம்

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 561 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். கேரளா, மேற்குவங்கம், அசாமில் தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. ஒன்றிய சுகாதார அமைச்கம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், நேற்று ஒரே நாளில் 15,906 பேர் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,41,75,468 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 561 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 16,479 பேர் தொற்றில் இருந்து மீட்கப்பட்டனர். இதன் மூலம் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3,35,48,605 ஆக உயர்ந்தது.

நேற்று வரை 70 லட்சத்துக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை நாடு முழுவதும் 102 கோடி டோசுக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் நேற்று மட்டும் 974 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். துர்கா பூஜை முடிவடைந்த நிலையில், தற்போது அங்கு தொற்று அதிகரித்து வருகிறது. அதேபோல், அசாமில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக 300க்கும் மேற்பட்டோர் தினசரி ெதாற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,909 பேருக்கு புதியதாக தொற்று பாதிப்பும், 65 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>