ஜம்முவில் கடும் மழை, நிலச்சரிவு, பனி: 3 பேர் பலி; நெடுஞ்சாலைகள் மூடல்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பவ்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம்  முதல்  கனமழை யும், பனிப்பொழிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஜம்மு காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும்  ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய  நெடுஞ்சாலையின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.  ரம்பான் -பனிஹல் இடையே பெரும்பாலான இடங்களில் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்துள்ளன. இதனால், இந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

பூஞ்ச்,  ரஜோரி மாவட்டங்களை சோபியான் மாவட்டத்துடன் இணைக்கும் முகால் சாலையிலும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ரம்பன், தோடா, கிஸ்த்வார், பூஞ்ச், ரஜோரி மற்றும் ரியாசி மாவட்டங்களிலும் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால், ஆப்பிள் தோட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், புல்வாமா மாவட்டத்தில் நாடோடிகள் தங்கியுள்ள பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகினர்.

Related Stories:

More
>