காஷ்மீரில் வெளிமாநிலத்தவர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 நாள் பயணமாக ஸ்ரீநகர் சென்றார் அமித் ஷா

காஷ்மீர்: காஷ்மீரில் வெளிமாநிலத்தவர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் நிலைமையை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு சென்றுள்ளார். காஷ்மீரில் வெளிமாநில தொழிலாளர்களை பயங்கரவாதிகள் தொடர்ந்து குறிவைத்து தாக்கி வருகின்றனர் சிலர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பிறர் அச்சத்துடன் தங்கள் சொந்த மாநிலத்திற்கு வெளியேறி வருகின்றனர். இதையடுத்து காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் நிலவரம் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா எடுத்துரைத்தார். இந்நிலையில் அமித்ஷா 3 நாள் பயணமாக ஸ்ரீநகர் சென்றுள்ளார். அமித்ஷா தங்கி உள்ள ஆளுநர் மாளிகையை சுற்றிழும் 20 கிமீ சுற்றளவுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறி தவறாமல் சுடுவதில் தேர்ந்த வீரர்கள் ஆளுநர் மாளிகையை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர்.

ட்ரோன் விமானம் மூலமும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

காஷ்மீரில் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பாதுகாப்பு படையினருடன் அமித்ஷா ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. மேலும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் அமைச்சர் அமித்ஷா சந்திக்க உள்ளார்.

Related Stories: