அடையாளம்பட்டு ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் திமுக வெற்றி

பூந்தமல்லி: வில்லிவாக்கம் ஒன்றியம் அடையாளம்பட்டு ஊராட்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி மன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்த செல்வி சரவணன் வெற்றி பெற்றார். துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் இரண்டு முறை நடந்த நிலையில் பல்வேறு பிரச்னைகளால் துணை தலைவர் தேர்வு செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மீண்டும் துணை தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திமுகவை சேர்ந்த கவுரிசங்கர் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடந்த நிலையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories:

More
>