சபரிமலையில் தேவசம் போர்டு இருக்கும்போது ஆன்லைன் முன்பதிவை போலீஸ் செய்வது ஏன்?.. கேரள உயர் நீதிமன்றம் கேள்வி

திருவனந்தபுரம்:சபரிமலை  ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்கு பெருமளவு பக்தர்கள் வருவதால் தரிசனத்துக்கு  பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதையடுத்து, கேரள போலீஸ் தரப்பில் ஆன்லைன்  முன்பதிவு நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதற்காக  புதிய இணையதளம்  உருவாக்கப்பட்டது.இதை கையாளும் பொறுப்பை தங்களிடம் ஒப்படைக்கும்படி போலீசிடம்  திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டது. போலீசார் அதை ஏற்கவில்லை.

இதனால், கேரள உயர் நீதிமன்றத்தில் தேவசம் போர்டு வழக்கு தொடர்ந்தது. இதை நேற்று விசாரித்த நீதிமன்றம், ‘சபரிமலையில் அனைத்து காரியங்களையும் திருவிதாங்கூர்  தேவசம் போர்டுதான்  செய்து வருகிறது. அப்படி இருக்கும்போது ஆன்லைன் முன்பதிவை மட்டும் போலீசார் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சபரிமலையில்  ஆன்லைன் முன்பதிவு  முறையை போலீஸ் கையாள்வது ஏன்? ஆன்லைன் முன்பதிவு இணையதளத்தில்  விளம்பரங்களை பதிவேற்றுவதும் தவறாகும். இது தொடர்பாக அரசு உரிய  விளக்கம்  அளிக்க வேண்டும்,’ என்று உத்தரவிட்டது.

Related Stories:

More
>