ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு கூறிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டு கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி கூறியுள்ளார். மின்துறை மீது புகார் அளித்தவர்கள் 24 மணி நேரத்தில் ஆதாரங்களை வெளியிடாதது ஏன்? என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். சமூக வலைத்தளங்களில் போகிற போக்கில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வேலையில்லாதவர்கள் சுமத்த கூடாது. பொதுவெளியில் அண்ணாமலை போன்றோர் குற்றச்சாட்டுகளை ஆதாரமின்றி சுமத்த கூடாது என்று செந்தில் பாலாஜி கூறியுள்ளார். அரசின் மீது அவதூறு பரப்புவதை நாங்கள் சும்மா பார்த்து கொண்டு இருக்க மாட்டோம் என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அரசின் மீது ஆதாரமுடன் குற்றம் சுமத்தினால் நாங்கள் விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம். மின்துறையில் அனைத்து திட்டப்பணிகளையும் வெளிப்படை தன்மையுடன் அரசு நிறைவேற்றி வருகிறது.

Related Stories:

More
>