காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன், ஸ்கூட்டி வழங்கப்படும்: பிரியங்கா காந்தி அறிவிப்பு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்களும், பட்டதாரி பெண்களுக்கு பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டியும் வழங்கப்படும் என்று கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார். அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தர பிரதேச பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த சில மாணவிகள் சிலர் செய்தியாளர் ஒருவரிடம் தங்கள் கோரிக்கைகளை வைக்கும் வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தான் நேற்று சில மாணவிகளை சந்தித்ததாகவும், அவர்கள் தங்கள் படிப்பிற்கும் பாதுகாப்பிற்கும் ஸ்மார்ட் போன் வழங்குமாறு தன்னிடம் கேட்டதாகவும், பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்களும், பட்டதாரி பெண்களுக்கு பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டியும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

மாநில மேலிட பொறுப்பாளராக உள்ள பிரியங்கா கட்சியின் தேர்தல் அறிக்கை குழுவின் இசைவோடு இதை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிட 40% பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கடந்த செவ்வாய் அன்று பிரியங்கா காந்தி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: