சித்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே மழைநீருடன் தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு-நோய் தொற்று பரவும் அபாயம்

சித்தூர் : சித்தூர் மாநகரத்தில் உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகின்றனர். ஏராளமான வெளி மாநிலத்தை சேர்ந்த பயணிகள் திருப்பதி, காணிப்பாக்கம், ஸ்ரீகாளஹஸ்தி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு செல்ல வருகை தருகின்றனர். ஆனால், புதிய பஸ் நிலையம் அருகிலேயே மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைகளை அள்ளுவதற்காக மேடை அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் குப்பை லாரிகள் வந்து நின்ற பின் அப்பகுதியில் உள்ள குப்பைகளை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பின்னர், ஒப்பனப்பள்ளி மற்றும் பண்டப்பள்ளியில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.   இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குப்பை மேடை அருகே மழைநீருடன் கலந்து கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியத்தால் மழைநீருடன் கலந்த கழிவுநீர் அகற்றப்படாமல் உள்ளது.எனவே, மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீருடன் கலந்த கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: