கண் தானம், ரத்த தானம் செய்ய 25 மொழிகளில் சிரஞ்சீவி இணையதளம்

சென்னை: ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ள நடிகர் சிரஞ்சீவி அறக்கட்டளை சார்பில் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுமக்களில் ஆர்வம் கொண்ட பலர் கண் தானம் மற்றும் ரத்த தானம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஐதராபாத்தில் சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம் சரண், 25 மொழிகளில் சிரஞ்சீவி அறக்கட்டளை இணையதளம் தொடங்கினார்.

அவர் கூறுகையில், ‘இனிமேல் மொழி பிரச்னை இல்லாமல் பொதுமக்களில் விருப்பம் உள்ளவர்கள் கண் தானம் மற்றும் ரத்த தானம் செய்ய முன்வரலாம். அவர்களுக்காக ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது. கே.சிரஞ்சீவி என்ற இணையதளத்தில், சிரஞ்சீவி வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் நடித்த படங்கள், பாடல்கள் இடம்பெற்றுள்ளது’ என்றார்.

Related Stories: