முல்லைப் பெரியாறு அணை வலுவாகவே உள்ளது: ஒன்றிய அரசு

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதால் பாதுகாப்பு பற்றி பேச இனி எதுவுமில்லை என முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அணை கதவுகள், மதகுகள், நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்த பழுதுகள் சரி செய்யப்பட்டு விட்டன. இன்னும் இருக்கும் சிறு சிறு வேலைகளும் இந்தாண்டு இறுதிக்குள் முழுமையாக நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>