சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: 6 சிஆர்பிஎப் வீரர்கள் காயம்

ராய்ப்பூர்: ராய்ப்பூர் ரயில் நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் ஆறு சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர்.  சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஜம்முவுக்கு ராணுவ வீரர்ககளை அழைத்து செல்ல ரயில் ஒன்று நின்று கொண்டிருந்தது. 211வது பட்டாலியனின் சிஆர்பிஎப் வீரர்கள் அந்த ரயிலில் செல்வதற்காக வரிசையாக வந்து கொண்டிருந்தனர். அவர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை தங்களது இருப்பில் வைத்திருந்தனர். ராய்ப்பூரில் இருந்து ஜம்மு செல்ல காலை 6.30 மணிக்கு ரயில் தயாரானது. இதற்கிடையே, வெடிபொருட்களை ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டியில் மாற்றி வைக்கும் போது, அதிலிருந்த வெடிபொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

அப்போது அங்கு நின்றிருந்த வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, வெடிகுண்டு வெடித்த இடத்தை பார்த்த போது, பலத்த காயத்துடன் வீரர் ஒருவர் மயக்கமடைந்தார். மேலும் ஐந்து வீரர்கள் லேசான காயத்துடன் தப்பினர். படுகாயமடைந்த மற்ெறாரு வீரர் ராய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மீதமுள்ள ஐந்து வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் ஜம்முவுக்கு அனுப்பப்பட்டனர். அதையடுத்து சில நிமிடங்கள் தாமதமாக அந்த ரயில் ராய்ப்பூரில் இருந்து ஜம்மு நோக்கி கிளம்பியது. சிஆர்பிஎஃப் மற்றும் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ராய்ப்பூர் போலீசார் கூறுகையில், ‘குண்டு வெடிப்பில் நான்கு சிஆர்பிஎப் வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குண்டு வெடிப்பு எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’என்றனர்.

Related Stories: