ஆந்திரா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி

சென்னை: ஆந்திரா மாநிலத்தில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் மூடப்பட்டிருந்த தியேட்டர்கள், கடந்த சில மாதங்கள் முதலாக திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகத்திலும் 50 சதவீத இருக்கைகளுடன் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் வரும் 22ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகின்றன.

சில மாநிலங்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு தியேட்டர்களில் அனுமதி தரப்பட்டுள்ளது. தெலங்கானாவில் கடந்த ஜூன் முதலே 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் ஆந்திராவிலும் அதுபோல் 100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் செயல்பட, அம்மாநில அரசுக்கு தியேட்டர் அதிபர்கள், தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நேற்று முதல் ஆந்திராவிலும் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>