காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் சண்டை ராணுவ அதிகாரி உள்பட 2 வீரர்கள் வீர மரணம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன்  நடந்த மோதலில் ராணுவ அதிகாரி, வீரர் வீரமரணடைந்தனர்.  ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தர் துணை மண்டலத்தில் உள்ள நார் காஸ் வனப்பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் நேற்று நடத்திய தேடுதல் வேட்டையின் போது, மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் ராணுவ அதிகாரி, ராணுவ வீரர் படுகாயம் அடைந்து வீரமரணம் அடைந்தனர். ராணுவ வீரரின் உடல் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. அடர்ந்த காடு என்பதால் ராணுவ அதிகாரியின் சடலத்தை தேடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த வீரர்கள் விக்ரம் சிங் நேகி (26), யோகம்பர் சிங் (27) என கண்டறியப்பட்டு உள்ளது.அப்பகுதியில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது.  கடந்த 12ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி உள்பட 5 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களை கொன்ற தீவிரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகரில் கடந்த வாரம் அப்பாவி மக்களின் மீது தாக்குதல் நடத்தி கொன்ற தீவிரவாதிகளில் ஒருவன், புல்வாமாவில் உள்ள வாகிபக் பகுதியில் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதியை நேற்று சுற்றி வளைத்த வீரர்கள், அவனை சுட்டு கொன்றனர்.

Related Stories:

More
>