கர்நாடகாவில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் பரிதாபம்... 6 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு

பெங்களூரு : கர்நாடக மாநிலம் மகராபி கிராமத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய நகர் மாவட்டத்தில் உள்ள மகராபி கிராமத்தில் பல ஆண்டுகளாக நீடித்து வந்த குடிநீர் பிரச்னையை தீர்த்து வைப்பதற்காக கடந்த மாதம் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அப்போது குடிநீருக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் கழிவுநீர் கலந்துவிட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் மாசடைந்த நீரை குடித்த 50 பேருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கடந்த 20 நாட்களாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில். தொடர்ச்சியாக இதுவரை 6 பேர் உயிரிழந்தது கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கழிவுநீர் கலந்த நீரை குடித்ததால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு உடனடியாக கர்நாடக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மகாராபி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக குடிநீர் குழாயில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்து முறையாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: