புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு காவல் ஆணையர்கள் நியமனம்: தமிழ்நாடு அரசு

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தை பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு காவல் ஆணையர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்மையில் சென்னை காவல் ஆணையரகத்தை 3-ஆக பிரித்து தாம்பரம், ஆவடி ஆணையரகங்கள் அண்மையில் உருவாக்கப்பட்டன. இந்தியாவில் பத்து லட்சத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகள் ,மாநகராட்சி தகுதி பெறுகின்றன. இவற்றிற்கு மாநில அல்லது மாகாண அரசுகள் தனியான சட்டங்கள் மூலம் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கின்றன. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், நாகர்கோவில், ஓசூர், திண்டுக்கல் மற்றும் ஆவடி என தற்போது தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகள் உள்ளன.

சென்னை மட்டும் பெருநகர மாநகராட்சி என்ற அந்தஸ்தில் உள்ளது. இந்நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு காவல் ஆணையர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தாம்பரம் மாநகர காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி ரவி ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் ஆவடி மாநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: