எல்லை ஊடுருவல் முறியடிப்பு லஷ்கர் தீவிரவாதி சிக்கினான்: மற்றொருவன் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி பகுதியில் சந்தேகத்துக்கு இடமான தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், கடந்த 18ம் தேதி முதல் அங்கு தேடுதல் பணி தொடங்கியது. அப்போது பாகிஸ்தானில் இருந்து 6 பேர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர். இவர்களில் 2 பேர் இந்திய எல்லைக்குள் ஊடுருவினர். இவர்கள் இருவரும் பிடிபட்டதும், பாகிஸ்தான் எல்லைக்குள் நின்று கொண்டிருந்த 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட இருவரில் ஒருவன் கடந்த 26ம் தேதி தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டான். மற்றொரு 19 வயது இளைஞன் தன்னை விட்டு விடும்படி கெஞ்சியதால் அவனை உயிருடன் பிடித்துள்ளோம். அவன் தனது பெயர் அலி பாபர் பாரா என்றும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒகாரா மாவட்டத்தை சேர்ந்தவன் என்று கூறியதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.

Related Stories:

>