குற்றவாளிகள் வந்தால் தகவல் கொடுக்க வேண்டும்: வாகன ஓட்டுநர்களுக்கு போலீசார் அறிவுரை

பழநி: குற்றவாளிகள் வந்தால் தகவல் கொடுக்க வேண்டும் என பழநியில் வாடகை வாகன ஓட்டுநர்களிடம் போலீசார் கேட்டு கொண்டனர். தமிழகத்தில் தற்போது குற்ற செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் கார் ஆட்டோ மற்றும் பஸ் போன்ற பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இதுபோன்று சந்தேகப்படும்படி நடந்து கொள்பவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டுமென போலீஸ் தரப்பில் தற்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி திண்டுக்கல் மாவட்ட எஸ்பி சீனிவாசன் உத்தரவின்பேரில் டிஎஸ்பி சத்யராஜ் அறிவுறுத்தலின்படி பழநியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள், வாடகை கார் ஓட்டுநர்கள், தனியார் பஸ் டிரைவர்கள் போன்றோருக்கு டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சணாமூர்த்தி ஆகியோர் விழிப்புணர்வு முகாம் நடத்தினர். முகாமில் ஆயுதங்களுடன் வருபவர்கள், குற்ற சம்பவங்கள் தொடர்பாக உரையாடல் நடத்துபவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம், பயணிகள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. விழிப்புணர்வு முகாமில் ஆட்டோ டிரைவர்கள், டாக்ஸி டிரைவர்கள் மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>