ரூ100 கோடி மோசடி புகார்: சிவசேனா பெண் எம்பி கைது

மும்பை: ரூ. 100 கோடி மோசடி தொடர்பாக சிவசேனா பெண் எம்பியை மும்பையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் சிவசேனா எம்பி பாவனா காவ்லி என்பவர், மகிளா உத்கர்ஷ் என்ற அறக்கட்டளையை நடத்தி வந்தார். இந்த அறக்கட்டளையை நிறுவனமாக மாற்றிய விவகாரத்தில், அந்நிறுவனத்தின் இயக்குனர் சயீத் கான் என்பவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். முன்னதாக கடந்த ஆக. 30ம் தேதி வாஷிம் மாவட்டத்தில் உள்ள ரிசோட்  மற்றும் பாவனா காவ்லியின் நிறுவனங்களை அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது.

மேலும், நெடுஞ்சாலை திட்டப்பணியில் மேற்கண்ட நிறுவனத்தின் மூலம் ரூ. 100 கோடி நிதி மோசடி நடந்ததாக பாஜக தலைவர்  கிரித் சோமையா புகார் அளித்திருந்தார். இந்நிலையில், நிதி மோசடி வழக்கில் எம்பி பாவனா காவ்லி உள்ளிட்ட பலர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, அவர்கள் நேரில் வந்து பதிலளிக்க சம்மன் அனுப்பியது. இந்நிலையில், எம்பி பாவனா கால்வியை அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் வைத்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>