89வது பிறந்தநாள் மன்மோகன் சிங்குக்கு தலைவர்கள் வாழ்த்து

புதுடெல்லி: ‘உங்களிடம் கற்க வேண்டியது நிறைய உள்ளது’ என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாராட்டி ராகுல் காந்தி தனது பிறந்த நாள் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 89வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். பிரதமர் மோடி, பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ அலுவலக டிவிட்டரில், ‘தொலைக்கு பார்வை கொண்டவர், தனது வார்த்தையை காப்பாற்றுபவர், அர்ப்பணிப்புள்ள தேசபக்தர்,’ என்று கூறி புகழ்ந்துள்ளது. பிரதமர் மோடி கூறியுள்ள வாழ்த்தில், ‘நமது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன், நீண்ட நாள் வாழ பிரார்த்திக்கிறேன்,’ என்று கூறியுள்ளார். டிவிட்டரில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், ‘யாருக்கும் அஞ்சாதவர், சிறந்த புரிதலுடன் நாட்டின் பிரச்னையை திறமையாக கையாண்டவர், நல்ல அறிவாளி, தங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. நல்ல உடல்நலத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகிறேன்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories:

>