நீதித்துறையில் உங்களுக்காக 50 சதவீத இடஒதுக்கீட்டை கோபத்துடன் கேளுங்கள்: பெண்களுக்கு தலைமை நீதிபதி அறிவுரை

புதுடெல்லி: ‘என்னுடைய முழு ஆதரவும் உங்களுக்கு இருக்கிறது. எனவே, 50 சதவீத இடஒதுக்கீட்டை கோபத்துடன் கேளுங்கள்,’ என்று பெண் நீதிபதிகளுக்கான பாராட்டு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசினார். உச்ச நீதிமன்றத்தில் 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகள் சமீபத்தில் புதியதாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு பாராட்டு விழாவை பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் பங்கேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது: பெண்கள் அழக் கூடாது. நீதித்துறையில் உள்ள பெண் வக்கீல்கள் 50 சதவீத இடஒதுக்கீட்டை கோபத்துடன் கேளுங்கள். உங்களுக்கு ஆதரவாக நான் இருக்கிறேன். உலக பெண்கள் ஒன்றுபடுங்கள், நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை, உங்கள் உரிமை பெற உங்களுக்கு தகுதியுள்ளது. சட்டக் கல்லூரியில் பெண்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அப்போது தான் நீதித்துறையில் அதிகளவில் பெண்கள் இடம் பெறுவார்கள். இதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கு நான் மனப்பூர்வமாக ஆதரவளிப்பேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: