பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண் பலி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், புதுபூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(28), டிரைவிங் ஸ்கூல் வைத்துள்ளார். இவரது மனைவி திவ்யா(24). காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் பைக்கில் மனைவி, குழந்தையுடன் டிரைவிங் ஸ்கூலுக்கு சென்ற சத்தியமூர்த்தி, மனைவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு குழந்தையுடன் மாயமாகிவிட்டார். திவ்யாவை அப்பகுதியினர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். சத்தியமூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>