தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்!

சென்னை: தமிழகத்தில்  இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில்களில் தமிழில்  அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதை  எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப்  பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை என்றும் தீர்ப்பில் கூறியுள்ளது. குறிப்பிட்ட மொழியில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் வற்புறுத்த முடியாது.

 ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்ய  தேவையில்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.இந்த நிலையில்  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து யாரேனும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதால் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படுவது தொடர்பான விவகாரத்தில், அரசு தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>