சத்தி- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரிகளை வழிமறிக்கும் காட்டு யானைகள்

சத்தியமங்கலம்:  சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. காட்டு யானைகள் அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவதோடு அவ்வழியே செல்லும் கரும்பு லாரிகளை வழிமறித்து கரும்பு துண்டுகளை பறித்து தின்பதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலை தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஆசனூர் அருகே மூன்று காட்டு யானைகள் சாலையில் சென்று கொண்டிருந்த கரும்பு லாரியை வழிமறித்து லாரியில் இருந்த கரும்பு துண்டுகளை தும்பிக்கையால் பறித்து தின்றபடி சாலையின் நடுவே நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றபின் போக்குவரத்து சீரானது. காட்டுயானைகள் லாரிகளை வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

Related Stories: