அதிமுக ஆட்சியில் வராத வாறுகால்...இப்போ வந்துருச்சு: சில்லமரத்துபட்டி மக்கள் மகிழ்ச்சி

போடி: போடி அருகே சில்லமரத்துப்பட்டி கிராம ஊராட்சியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சில்லமரத்துபட்டியில் இருந்து சிலமலை சாலையில் உள்ள காலனியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அல்லோலப்பட்டு வந்தனர். குறிப்பாக வாறுகால் வசதியில்லாததால், கழிவுநீர் மெயின் ரோட்டில் தேங்கி நிற்கிறது. இதனால், இப்பகுதியில் இருந்து உற்பத்தியாகும் கொசுக்கள் குடியிருப்புவாசிகளை படாதபாடு படுத்தி வந்தது.

இக்காலனியை கடந்த செல்ல முடியாமல் முதியவர்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் சிரமப்பட்டனர். பொறுக்க முடியாத துர்நாற்றத்தால் முகத்தை சுளித்தப்படி சென்றனர். மேலும், பல்வேறு தொற்று நோய்களுக்கு உள்ளாகினர். எனவே, ெபாதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் வாறுகால் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இந்நிலையில், தற்போது அந்த காலனி பகுதியில் உள்ள மெயின்  ரோட்டில் வாறுகால் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து காலனி மக்கள் கூறுகையில், கடந்த அதிமுக ஆட்சியில், பல ஆண்டுகளாக இப்பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்து வந்ேதாம். ஆனால், ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் பல்வேறு நல்ல மாற்றங்கள் நடந்து வருகிறது. இனிமேல், இப்பகுதியில் துர்நாற்றமும் இருக்காது, கொசுத்தொல்லையும் இருக்காது, என்றனர்.

Related Stories: