காசியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு காஞ்சிபுரம் வழியாக ரயில் இயக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் விஜயேந்திரர் வேண்டுகோள்

காஞ்சிபுரம்: காசியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு காஞ்சிபுரம் வழியாக ரயில் இயக்க வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகனிடம், காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் வேண்டுகோள் விடுத்தார். காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மணி மண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம் இருந்து வரும் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரரை, மத்திய தகவல் ஒலிபரப்பு, கால்நடை, மீன்வளம் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் எல்.முருகன் நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது, மத்திய அமைச்சர் முருகனிடம், மக்களுக்கு பல்வேறு துறைகளின் மூலமாக சேவை செய்யவும் அதிகமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த வாய்ப்பை அவர் நல்லமுறையில் பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.காசியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு காஞ்சிபுரம் வழியாக ரயில் இயக்க வேண்டும் என விஜயேந்திரர், கேட்டுக்கொண்டார். முன்னதாக ஓரிக்கை மணி மண்டப நுழைவாயிலில் காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேசன், மத்திய அமைச்சர் முருகனுக்கு மாலை அணிவித்து அமைச்சருடன் பாஜ மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு,துணைத் தலைவர் ஓம்.சக்தி பெருமாள், மாவட்ட பொதுச் செயலாளர் கூரம்,விஸ்வநாதன், அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்க மாநில துணைத் தலைவர் கணேஷ், காஞ்சிபுரம் நகர பொது செயலாளர் காஞ்சி வி.ஜீவானந்தம் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: