தா.பழூர் பகுதியில் மழையில் இடிந்து விழுந்த அரசு பள்ளி சுற்றுச்சுவரை பார்வையிட்ட அதிகாரிகள்

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டார பகுதியில் நேற்று முன்தினம் மாலை வேளையில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. இதனையடுத்து அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் ஆர்டிஓ அமர்நாத், ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்த், வருவாய் அலுவலர் தமிழரசன், விஏஓ., ஐய்யப்பன் ஆகியோர் நேரில் வந்து பள்ளியை ஆய்வு செய்தனர்.

அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள சுற்றுச்சுவர்கள் பல வருடங்கள் ஆவதாலும், ஆங்காங்கே விழுந்து சுற்றுச்சுவர் இல்லாததால் மிகவும் சிரமப்படுவதாக ஆசிரியர்கள் கூறியதன் அடிப்படையில், பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கும் கூடுதலாக பள்ளியில் கட்டிடங்கள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்வதாகவும், மேலும் பள்ளியை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பள்ளியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கூறி சென்றுள்ளனர். ஆய்வின்போது தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அசோகன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Related Stories: