காபூலில் இருந்து இந்தியாவுக்கு ஆப்கானியர்கள் செல்ல இ-விசா கட்டாயம்.: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: காபூலில் இருந்து இந்தியாவுக்கு ஆப்கானியர்கள் செல்ல இ-விசா கட்டாயம் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து  தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து இடங்களையும் கைப்பற்றிவிட்டனர்.

இந்தநிலையில் புதிய அரசை அமைக்க தலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற அதிக கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதிப்பதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் காபூலில் இருந்து ஏராளமான ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியா செல்ல விரும்புவதைத் தடுக்க தலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதனால் அந்த நாட்டு மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் அங்கிருந்து தப்பி வருகின்றனர். இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றமும், குழப்பமும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டதாலும், ஆப்கனிலிருந்து மக்கள் வேகமாக வெளியேறிவதற்கும் இ-விசா முறையை இந்திய அரசு அறிமுகம் செய்திருந்தது. இதனையடுத்து, தற்போது

இந்தியா வர விரும்பும் ஆப்கானியர்கள் இ-விசா பெற விண்ணப்பிக்க வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Related Stories: