மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதுவதே நீதி கிடைக்க ஒரே வழி: பாதிக்கப்பட்ட பெண் முடிவு

கொல்கத்தா: ஆளுநர் மீதான பாலியல் துஷ்பிரயோக விவகாரத்தில் குடியசு தலைவருக்கு கடிதம் எழுதவுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில், ராஜ்பவனில் பணிபுரியும் ஒப்பந்த பெண் ஊழியர், ஆளுநர் ஆனந்த போஸ் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக காவல்நிலையத்தில் எழுத்து மூலமாக புகார் கொடுத்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டை ஆளுநர் மறுத்துவிட்டார். மேலும் ஆளுநர் மாளிகையில் இருந்த இரண்டு சிசிடிவி காட்சிகளை நேற்று முன்தினம் அவர் திரையிட்டு தன் மீது பொய் புகார் கூறப்பட்டதாக தெரிவித்தார். இந்நிலையில் தனது முகத்தை மறைக்காமல் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டதற்கு பாதிக்கப்பட்ட பெண் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், ‘‘சிசிடிவி காட்சிகளை பொது வெளியில் திரையிட்டு ஆளுநர் என்னை அடையாளப்படுத்தியுள்ளார். அதில் எனது முகம் மறைக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் நீதி கிைடக்ககுடியரசு தலைவருக்கு கடிதம் எழுதுவதற்கு முடிவு செய்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

The post மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதுவதே நீதி கிடைக்க ஒரே வழி: பாதிக்கப்பட்ட பெண் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: