சென்னை: கடந்த காலம்போல் இல்லாமல் வெளிப்படையான நிர்வாகத்தை தருவதே தமிழக அரசின் நோக்கம் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். வடசென்னை அனல் மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை. அனல்மின் நிலைய பதிவேட்டில் இருக்கிறது; ஆனால் இருப்பில் நிலக்கரியை காணவில்லை. சுமார் ரூ.85 கோடி மதிப்பிலான நிலக்கரிகள் மாயமானது முதல் கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அனல் மின் நிலையத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து உரிய ஆய்வு நடத்தப்படும். நிலக்கரி காணாமல் போன விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
