தமிழகம் முழுவதும் ஒரு கோடி பயனாளிகளை கண்டறிந்து டிசம்பருக்குள் நீரிழிவு, ரத்த அழுத்த நோய்க்கான மருந்து வழங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: சென்னை,  மேற்கு மாம்பலத்தில் உள்ள பொது சுகாதார மைய மருத்துவமனையில் இதய அறுவை  சிகிச்சை மருத்துவ உபகரணமான  ஹெபாபில்ட்டரை மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.பின்னர் அமைச்சர்  மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில்  தடுப்பூசி கையிருப்பை பொறுத்தவரை 11 லட்சம் அளவிற்கு உள்ளது. 2 அல்லது 3  நாட்களுக்கு இவை பொதுமக்களுக்கு செலுத்தப்படும்.கடந்த ஆட்சியில்  பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் திறக்கப்பட்டது. ஆனால்  அங்கு  போதிய வசதிகள் இல்லை.

எனவே பேருந்து  நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாமல் இருக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறை அந்த   துறை சார்ந்த அமைச்சரிடம் கூறி சீரமைக்கப்படும். டிசம்பர் மாத இறுத்திக்குள்  ஒரு கோடி பயனாளிகளை கண்டறிந்து, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்கான  மருந்துகள் வழங்கப்படும். மேலும் சைதாப்பேட்டையில் உள்ள பேருந்து நிலையத்தில்  தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் தாய்ப்பாலூட்டும் அறை அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கொரோனாவால் இறந்தவர்களில் 60% பேர் நீரிழிவு, ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள்

சென்னை கிண்டி கிங் கொரோனா மருத்துவமனைக்கு தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தனியார் அமைப்பு இணைந்து ₹16 லட்சம் மதிப்புள்ள கொரோனா நோய்த்தடுப்பு உபகரணங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் நேற்று வழங்கினர். அப்போது அவர் பேட்டியளிக்கையில், ‘‘கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களில் 60 சதவீதம் பேர், நீரிழிவு நோயாலும், ரத்த அழுத்த நோயாலும் பாதிக்கப்பட்டவர்கள்’’ என்றார்.

Related Stories: