உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் அர்ச்சனை தொடங்கியது!: பக்தர்கள் மகிழ்ச்சி..!!

தஞ்சை: உலக புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலில் இன்று முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது. இதனால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் இன்று தொடங்கியது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி முதற்கட்டமாக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 47 பெரிய கோயில்களில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டம் தஞ்சையில் உள்ள 1000 ஆண்டு பழமைவாய்ந்த உலக புகழ்பெற்ற பெரியகோயிலில் இன்று நடைமுறைக்கு வந்தது.

சமஸ்கிருதம் மட்டுமே கோலூன்றி வந்த உலக பாரம்பரிய சின்னமான பெரிய கோயிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற குடமுழக்கில் தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்தது. தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டன. கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: