வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்..!!

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் தமிழக விவசாயிகளும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். மத்திய அரசால் கொண்டு வரப்பட்டிருக்கின்ற 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியின் எல்லை பகுதிகளான சிங்கூ, காசிப்பூர் உள்ளிட்ட 4 எல்லை பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் என்பது 6 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற 3 வேளாண் சட்ட திருத்தங்களும் விவசாயிகளுக்கு எதிரானதாக இருக்கின்றது.

எனவே வேளாண் சட்டங்களை திரும்ப பெரும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என டெல்லி விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி முதல் உறுதியுடன் போராடி கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க டெல்லி வந்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் இருக்கின்ற ரயில்வே நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இந்த போராட்டத்தில் கே.பாலகிருஷ்ணன், சு.வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதை தொடர்ந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டுள்ளனர்.

Related Stories:

>