அசாமில் ஷூட்டிங்கின் போது நடிகையின் மூக்கில் படுகாயம்: பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டார்

மும்பை: அசாமில் சினிமா ஷூட்டிங்கின் போது, பாலிவுட் நடிகை சாரா அலிகானின் மூக்கு உடைந்ததால், அவர் தொடர் சிகிச்சையில் உள்ளார். பாலிவுட் நடிகை சாரா அலிகான், சமூக வலைதளங்களில் வீடியோவை ஒன்றை பகிர்ந்துள்ளார், அதில், அவர் வெளியிட்ட பதிவில், ‘மன்னிக்கவும் அம்மா, அப்பா. என் மூக்கு உடைந்துவிட்டது...’ என்று கூறியுள்ளார். அதனுடன் தனது இரு புகைபடங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் சாரா அலிகானின் மூக்கில் காயம் ஏற்பட்டு, அதற்கு சிகிச்சை எடுத்து கட்டு போட்டுள்ளார்.

சாரா அலிகான் தரப்பில் விசாரித்த போது, அசாம் போலீஸ் கமாண்டோ பட்டாலியன் வீராங்கனையின் வாழ்க்கை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படம் எடுக்கப்படுகிறது. அதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு அசாமில் சாரா அலிகான் இருந்தார். அப்போது படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தொடர் சிகிச்சையில் உள்ளார் என்று தெரிவித்தனர்.

Related Stories:

>