வெற்றியும் தோல்வியும் சகஜம்: பிரதமர் மோடி ட்வீட்

புதுடெல்லி: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் போட்டியின்  ஆடவர் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இந்திய  - பெல்ஜியம் ஆடவர் ஹாக்கி அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டத்தில், இந்தியா 2 -  5 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் போராடி தோல்வியடைந்தது.

இந்நிலையில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி தோல்வியைத் தழுவிய நிலையில், பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘வெற்றியும் தோல்வியும் சகஜம். அதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியினர் சிறப்பாக விளையாடினார்கள்’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>