அந்தமானில் 3 நிலநடுக்கம்

போர்ட்பிளேயர்: அந்தமான் - நிகோபார் தீவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். இந்திய எல்லைக்கு உட்பட்ட அந்தமான் - நிகோபார் தீவில் அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் இன்று காலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய நில அதிர்வுகள் மையம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘அந்தமான் நிகோபார் தீவில் இன்று காலை 7.21 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலும், 9.12 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலும், 9.13 மணியளவில் 5.9 ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.

மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த 3 நிலநடுக்கங்களால், அந்தமான் பகுதி மக்கள் பீதியடைந்தனர். இருந்தும், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>